உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் இன்று வர்த்தக பிரதிநிதிகள் பலரை ஹோட்டல் செங்சிலாவில் சந்தித்திருந்திருந்தார்.

அத்துடன், மேலும் பல வர்த்தக ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்குமிடையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது பிரதமரும் அவருடைய குழுவினரும் சிங்கப்பூரின் தேசிய கலைக்கூட சுற்றுலாவில் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிங்கப்பூரின் படகு சவாரியிலும் இணைந்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை, தனிப்பட்ட விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்ளும் பிரதமர் இன்று இரவு நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments