இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் நோர்வேயும்மீள்குடியேறியோருக்கான உதவிதிட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பில் உடன்படிக்கையை செய்துள்ளன.

இன்று இதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைப்பிரதிநிதி Lovita Ramguttee மற்றும் நோர்வேயின் தூதுவர் Thorbjørn Gaustadsæther ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது.

இந்த உடன்படிக்கையின் மூலம் மீளக்குடியேற்றப்பட்ட யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மற்றும் திருகோணமலை சம்பூர் பகுதி மக்கள் நன்மை பெறவுள்ளனர்

குறித்த மக்களுக்கு பொருளாதார முன்னேற்ற உதவிகளே வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக இந்த பகுதியின் 1520 குடும்பங்கள் நேரடியாக நன்மைப்பெறவுள்ளன.

Facebook Comments