பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாரஹென்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவும் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்கே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனுர சேனாநாயக்கவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நிராகரித்ததை தொடர்ந்து, அதனை மேன்முறையீடு செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அனுர சேனாநாயக்க மனு தாக்கல் செய்திருந்தார்.

2012ம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வசீம் தாஜூடீன் கொலை செய்யப்பட்டார்.

தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் வசீம் தாஜூடின் சித்திரவதை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Facebook Comments