நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச விடுதலையாகி நீதிமன்றை விட்டு வெளியில் வந்த விதம், உலக கிண்ணத்தை வென்று நாடு திருப்பியமைக்கு ஒப்பானதாக இருந்தது.

இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்தில் 7 கோடி ரூபா பணம் பெற்றுக் கொண்டமையே நாமலுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டாகும். இவ்வாறு பெற்றுக்கொண்ட பணம் ரகர் விளையாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுகொள்ளப்பட்டதென கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரகர் விளையாட்டின் முன்னேற்றத்திற்காக பணம் பெற்றுக் கொள்வது மோசடியா? என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கேள்வியெழுப்பியிருந்தார்.

அப்படியென்றால் நாமல் இந்த பணத்தில் சிங்கப்பூர் ரகர் விளையாட்டையா அபிவிருத்தி செய்தார் என தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த பணம் சிங்கப்பூர் HSBC வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமையினாலே இந்த கேள்வி எழுந்துள்ளது.

நாமல் ரகர் விளையாட்டை அபிவிருத்தி செய்த முறை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள். ஒரு நாடு – ஒரு குடும்பம் என்ற முறையின் கீழ் அண்ணன் மற்றும் இரண்டு தம்பிகளும் அணிக்காக விளையாடியே அவர்கள் ரகர் விளையாட்டை அபிவிருத்தி செய்தனர்.

வீரர்கள் எதிர்பார்த்து காத்திருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மூவரும் தேசிய அணியில் இணைந்து கொண்டது மாத்திரமின்றி, திறமையான போட்டியாளராக செயற்பட்ட வசீம் தாஜுடீன் உயிரிழக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments