கெசினோ சூதாட்டக்காரர்களுக்கு இலங்கையில் இடமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சிங்கபூர் வர்த்தகர்களை சிங்கப்பூரின் நெங்சிலா ஹோட்டலில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சந்திப்பின் போது வர்த்தகர் ஒருவர் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கெசினோ சூதாட்ட வர்த்தகர்களுக்கு இந்த ஆட்சியில்அனுமதி கிடைக்குமா? என பிரதமரிடம் கேட்டபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு கெசினோ வியாபாரத்தை ஆரம்பிப்பது நல்லாட்சியின் கொள்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பில் சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்துகொண்டிருந்ததோடு, நம்பிக்கையுடன் இலங்கையில் முதலீடு செய்யும் சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments