16 வருடங்களாக கிழக்கு மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் எவ்வித பயன்களும் கிடைக்கவில்லை என கிழக்கு உதயம் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுப்பினராக இருந்த காலம் தொடக்கம் கட்சியின் தலைவராக இருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கோ அல்லது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கோ இதுவரை எந்த தீர்வினையும் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் கிழக்கு உதயம் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் அசூர் சேகு இஸதின் தெரிவித்துள்ளார்.

Facebook Comments