முன்கூட்டியே நளினியை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்க நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு பதிலளித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என பதில் அளித்தது. இதனையடுத்து விடுதலையை எதிர்பார்த்து வழக்கு தாக்கல் செய்த நளினி ஏமாற்றமடைந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments