லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான்.

காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கவிப்பிரியா தெரிவிக்கையில், என்னால் அதை நம்ப முடியவில்லை, எனக்கு என்னுடைய பிள்ளைகள் மாத்திரமே வேண்டும். இது தான் என்னுடைய முக்கிய எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

என் பிள்ளைகள் இல்லாவிட்டால் நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாதென குறித்த தாய் தெரிவித்துள்ளார். இது எவ்வாறு திடீரென நிகழ்ந்தது என தனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு என் காரை பற்றி எந்த அக்கறையும் இல்லை, எனக்கு என் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறியுள்ளார். பின் பொலிஸார் குறித்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் அந்த சமயத்தில் விசாரணைகள் இடம் பெற்று வந்ததாகவும் பின் நிரூபிக்கப்பட்ட பிறகு 19 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments