அம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயம் அடைந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் திருக்கோவில் – 02 நீதிமன்ற வீதியை சேர்ந்த ஜெயந்திரன் (வயது35) மகன் கஜேய் (வயது 8) ஆகிய இருவருமே பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கிருஸ்ணகலா வயது 28 தாய், கஜானி (வயது 3) மகள் ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மேலதிகச் சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Facebook Comments