இலங்கையில் 13 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுள் 40,000 மாணவர்கள் இன்னும் புகைத்தலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனையானது கடந்த பல வருடங்களைவிட இந்த வருடங்களில் குறைவடைந்துள்ளதாக புகைத்தல் மற்றும் மதுபாவனை தொடர்பான தேசிய அதிகாரசபையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களிடையேயான புகைத்தல் பாவனை 8 வீதமாக காணப்பட்ட அதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு 3 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்த அதிகார சபையின் பணிப்பாளர் வைத்தியர் பாலித அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments