பிரதான இரண்டு கட்சிகளும் குற்றமிழைத்த கட்சிகளின் உறுப்பினர்களை தண்டிப்பதில்லைர என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் குற்றமிழைத்த சுதந்திரக் கட்சி உறுப்பினரை தண்டித்தது கிடையாது.

அதேபோன்று சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதும் குற்றமிழைத்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டதில்லை.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தோரான் ஒன்றின் மின்குமிழ்களைப் போன்றவர்களேயாகும்.வெளிப்புறம் பார்த்தால் தனித்தனியாக ஒளிர்ந்தாலும் உள்ளே சென்று பார்த்தால் ஒரே வயரில் அனைத்து மின் குமிழ்களும் இணைக்கப்பட்டுள்ளன.

சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை போன்றே, பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும்.

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக உலவுகின்றார்கள்.

மேலும் சிலருக்கு சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை வழங்கப்படுகின்றது.

இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments