போர்க் குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நாட்டை மீட்டு எடுத்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

மஹிந்த ராஜபக்ச போர்க் குற்ற நீதிமன்றத்தை நிறுவ இணங்கியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ச, இராணுவத்தை போர்க் குற்ற நீதிமன்றில் தள்ளியே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தார். எனினும், அந்தப் பொறியில் தாம் சிக்க நேரிடும் என்று புரிந்து கொண்ட உடன் எதிர்ப்பை வெளியிட்டார்.

2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது போர்க்குற்ற நீதிமன்றிற்கு மஹிந்த இணங்கியிருந்தார்.

அதன் பின்னர் தாருஸ்மன் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் போர்க்குற்ற நீதிமன்ற பொறிமுறையிலிருந்து நீங்கி, உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

போரின் போது இரண்டு தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டனர். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments