பேலியகொடை பகுதியில் கண்டெயினர் ஒன்றில் இருந்து 274 கிலோகிராம் கொகேயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் மீட்கப்பட்ட அதிக தொகை கொகேயின் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ள கண்டெயினர் சீனி கொண்டு செல்ல பயன்படுவது எனத் தெரியவந்துள்ளது.

Facebook Comments