காணிகளையும் ,இறங்குதுறையையும்   அபகரிக்கும் கடற்படை ;  அன்புபுரம்  மக்கள்   குற்றச்சாட்டு

கிளிநொச்சி, முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதன் காரணமாக, இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவழியூடாக கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன்   அன்புபுரம்   பகுதியில்  உள்ள     ஆயிரம்  ஏக்கறிற்கும்  மேற்ப்பட்ட  காணிகளை அபகரித்து   வைத்துள்ளதாகவும்   குற்றம்  சாட்டி உள்ளனர்

எழுபது வரையான குடும்பங்கள் இக்கிராமத்தில் கடற்றொழிலையே நம்பியுள்ளனர். இக்குடும்பங்கள் கடற்றொழில் புரிவதற்கு இவ் இறங்குதுறை முக்கியமானதாகும். ஆனால் கடற்படையினர் இவ் இறங்குதுறையில் நிலைகொண்டிருப்பதன் காரணமாக தொழிலுக்குச் செல்லும்போது நீண்டதூரம் சென்று கடலில் இறங்கவேண்டியுள்ளதாகவும் கடந்த  இருபத்தைந்து  வருடங்களிற்கு  மேலாக  இவ்  இறங்குதுறையை  தாமே  பயன்படுத்தி   வந்த  நிலையில்  கடற்படையினர்  பிடித்திருப்பது  மட்டுமல்லாமல்  தாங்கள்  வாழ்ந்த  காணிகளிலும்  இருந்து  தம்மை  வெளியேற்றி  வீதியின்  மறுபுறத்தில்   இருக்குமாறும்  பணித்துள்ளனர் அத்துடன்  அக்காணிகளை  சுற்றி  முட்கம்பி  வேலிகளை  அமைத்துள்ளதாகவும்   தமது   காணிகளிளிருந்தும்

இறங்குதுறையிலிருந்து கடற்படையினரை இடமாற்றுவதற்கு  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  கேட்டு நிற்கின்றனர்  anpupuram1 anpupuram2 anpupuram3 anpupuram4 anpupuram5 anpupuram6 anpupuram7

Facebook Comments