கூட்டு எதிர்கட்சியின் பாதயாத்திரை இன்று இறுதி கட்டத்தை அடைய உள்ளதாகவும், உண்மையான அதிகாரம் என்றால் என்னவென்று இன்று மாலை காணலாம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பேரணியின் இறுதி நாளாக கிரிபத்கொடவில் இன்று காலை ஆரம்பிக்கஉள்ளதாகவும் திட்டமிட்டிருந்தனர்.

இதேவேளை இறுதி பேரணியின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள்கலந்துகொள்வார்கள் எனவும் கூட்டு எதிர்கட்சி முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதயாத்திரை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவு பெறும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் இன்று காலை பதிவேற்றியுள்ளார்.

Facebook Comments