கம்பன் போல் வள்ளுவன் போல் பாரதிபோல் என நிறுத்திக்கொள்ளாமல் திலீபன் போலென தொடரவேண்டும் எமது பெருமை
கவிஞர்பொன்.காந்தன்
கிளிநொச்சி திருவையாறைச் சேர்;தவரும் சுவிஸில் வசித்து வருபவருமான கதிர்காமநாதன் சசிகுமார் அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த 25 மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியை தலா ஆயிரம் வீதம் இன்று வழங்கிவைத்தார். இந்த நிதி மாதாந்தம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு இன்று கவிஞர் பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்றது.இதில் கவிஞர் கதிரோவியன்(கதிர்காமநாதன் செல்வகுமார் சுவிஸில் இருந்து வந்திருக்கும் கதிர்காமநாதன் சசிகுமார் இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர் ஆலய நிர்வாகத்தினரான திருநாகேஸ்வரன் செல்வம் ஊடவியலாளர் கஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.கிளிநொச்சி பாரதிபுரம் பளை கனகாம்பிகைகுளம் திருநகர் இரத்தினபுரம் ஆனைவிழுந்தான் ஊற்றுப்புலம் மருதநகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தலைமை வகித்த பொன்.காந்தன் தனது உரையில்
நீங்கள் உயர்ந்த நிலையை அடையும்போது வரலாறு உங்களை தேடும் அது உங்கள் வேர் பற்றியும் நீங்கள்கடந்து வந்த துயரங்கள் பற்றியும் சமுகத்துக்கு உதாரணங்களை கொண்டுவரும்.இதுதான் இந்த உலகின் கடந்த வரலாறுகள் சொல்கின்ற பாடம்.புரட்சிகள் துணிவில் இருந்தும் சாதனைகள் முயற்சியில் இருந்தும் புறப்படுகின்றன.அதற்குசொந்தக்காரர்களாக மாறவேண்டும்.ஊடகங்களை பார்க்கின்றபோது ஆச்சரியங்கள் உண்டு நமது கிராமங்களில் நமது இளைய சமுதாயம் கண்டுபிடிப்புக்களை செய்கின்றது.உலகத்தில் தமிழினத்தின் வரலாறு பெருமை மிக்கதும் அதே வேளை துயர்மிக்கதுமாக அசைகின்றது.சிலவற்றை நாம் மாற்றவேண்டுமெனில் நாம் மாறியாகவேண்டும்.அந்த மாற்றத்தை கல்வி ஊடாகவும் கொண்டுவரலாம்.கல்வியும் எங்கள் மூலதனம் என்பது நாம் எமது இதயங்களில் இருக்கவேண்டிய வாசகம்.வள்ளுவன் போல் கம்பன்போல் பாரதிபோல் நிறுத்திக்கொள்ளாமல் திலீபன்போல என தொடரவேண்டும்  எமது பெருமை. எமது வரலாற்றை பெருமையோடு தொடர்ந்து எழுத வேண்டுமெனில் எமது பிடிமானம் கல்வி ஒன்றுதான்.எமது இனத்தின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கடமை இன்று இன்றைய மாணவர்களின் கையில்தான் இருக்கின்றது.கல்வி என்பது வெறுமனே பட்டங்களோடும் பதவிகளோடும் சம்மந்தப்பட்டதல்ல.அதன் நோக்கு .இந்த சமுகத்தின் அபிலாசைகளோடு கூடியது என்பதை நாம் எண்ணங்களில் கொள்ளவேண்டும்.
Facebook Comments