நவக்­கி­ர­கங்­களில் சுபக்­கி­ர­க­மாக அமை­கின்­றவர் குரு­ப­கவான். ஒவ்­வொரு வரு­டமும் ஒவ்­வொரு ராசி­யாக பெயர்ச்சி பெற்று அதன் மூலம் உத்­தம, மத்­திம பலன்­களை ராசி­க­ளுக்கு கொடுக்­கின்­றவர். அந்த வகையில் 02–08–2016 செவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பாணம் இர­கு­நாத ஐயர் வாக்­கிய பஞ்­சாங்­கப்­படி காலை 10 மணி 35 நிமிட நேர­ம­ளவில் குரு­ப­கவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி பெறு­கின்றார்.

இதன் மூல­மாக சிம்மம், இடபம், மகரம், விருச்­சிகம் ஆகிய ராசி­யு­டையோர் அதி­க­மான சிறப்புப் பலன்­க­ளையும் துலாம், தனுசு, மீனம் ராசி­யினர் ஓர­ள­விற்கு நற்­ப­லன்­க­ளையும் கன்னி, கடகம், மிதுனம், மேடம், கும்பம் ராசி கொண்டோர் சற்று சிர­ம­மான பிரச்­சி­னை­யான பலன்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்­டிய நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்­களின் செயல்­களை நிதா­ன­மாக, பொறு­மை­யாக உரிய வழி­பா­டுகள், பரி­கா­ரங்கள் செய்து நற்­ப­லன்­களை ஓர­ள­விற்கு பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கலாம். பொது­வா­கவே எம் செயல்­களும் சிந்­த­னை­களும் தர்ம நியாய நிலை­யாக அமை­கின்ற போது பெரிய அளவில் சிர­மங்கள் எம்மை அனு­காது. அனை­வ­ருக்கும் அன்னை ஆதி­ப­ரா­சக்தி நல்­லருள் பொழிய பிரார்த்­திப்போம்.

மேட ­ராசி

(அஸ்­வினி, பரணி, கார்த்­திகை.

1ஆம் பாதம்)

தீர்க்­க­மான நிர்­வாகத் திறன் கொண்ட மேட­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் “ரோகஸ்­தானம்” எனப்­படும் 6 ஆம் இடத்­திலே அமை­கின்றார். பொது­வா­கவே உங்­களின் ராசி நிலைக்கு பாக்­கிய, விர­யஸ்­தான, ஆதி­பத்­தியம் பெறு­கின்ற குரு­ப­கவான் 6 ஆம் இடம் அமை­வது பெரும் சிறப்புப் பலன்­களை எதிர்­பார்க்க முடி­யாது. அதே­நேரம் பாக்­கி­யஸ்­தான ஆதி­பத்­திய நிலையின் சிறப்­பினால் கடும் சிரமப் பலன்­களும் இருக்­காது. ஓர­ள­விற்கு நன்­மை­களைப் பெற முடியும். தொழில் நிலை­களை பொறுத்­த­வ­ரையில் சற்று அலைச்சல், இழு­பறி நிலை அதிகம் இருக்கும். எடுக்­கின்ற முயற்­சி­களில் அதி­க­மான போராட்­டங்­களை எதிர்­கொள்ள வேண்டி வரும். பண­வ­ரவு, பணச்­சே­மிப்பு போன்ற நிலை­க­ளிலே சற்று நிதா­னத்­தோடு செயற்­ப­டு­வதே மிக நல்­லது. குடும்ப நிலையில் சஞ்­ச­லங்­களும் தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­களும் எதிர்­கொள்ள வேண்­டிய நிலை­யி­ருக்கும். உடல் நிலை சார்ந்த உபா­தைகள், மருத்­துவ செலவு என்­பன சற்று அதி­க­மாக இருக்கும். பெண்­க­ளுக்கு மன­நி­லையில் அதி­க­மான யோச­னைகள் இருக்கும்.

குடும்ப நிர்­வா­கத்­திலே பல சிக்­கல்­களை சமா­ளிக்க வேண்­டிய நிலை இருக்கும். மாண­வர்கள் கல்­வியில் பொறுமை, நிதானம் கொண்டு செயற்­பட வேண்டும். பரீட்­சை­களில் மறதி நிலை, மந்த நிலை இருக்கும். உங்­களின் ராசி நிலைக்கு “அட்­ட­மத்­துச்­சனி” சஞ்­சா­ரமும் அமை­வ­தனால் மிகவும் நிதா­னத்­தோடு செயற்­ப­டுங்கள். வியாழன் தோறும் குரு­விற்கு கடலை மாலை அணி­வித்து மஞ்சள் புஷ்­பத்தால் அர்ச்­சனை செய்­யுங்கள். இந்தக் குருப்­பெ­யர்ச்­சியின் போது உங்­களின் சாணக்­கியம் மூலமே அனு­கூலம் கிடைக்கும். நூற்­றிற்கு 40% நன்­மைகள் பெறலாம்.

இட­ப ­ராசி

(கார்த்­திகை 2, 3, 4 ஆம் பாதம், ரோகினி, மிரு­க­சீ­ரிடம், 1, 2 ஆம் பாதம்)

அமை­தி­யான ஆளு­மைத்­திறன் கொண்ட இட­ப­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு குரு­ப­கவான் “பஞ்­ச­மஸ்­தானம்” எனப்­படும் 5 ஆம் இடம் அமை­கின்றார். அனு­கூ­ல­மான சிறப்­பான நன்­மைகள் அமையும். குடும்ப நிலையில் மகிழ்வும் சிறப்பும் அமை­கின்ற நிலை இருக்கும். தொழில் நிலை­களில் நல்ல முன்­னேற்றம் அமையும். புதிய முயற்­சிகள், அனு­கூ­ல­மான வெற்றி தரும்.

திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் நிறை­வாக அமையும் நிலை இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மாக அமையும். தொழில் நிலை சார்ந்த வெளி­நாட்டு பிர­யா­ணங்கள் அமையும் நிலையும் ஏற்­படும். பெண்­க­ளுக்கு தங்­களின் எண்­ணங்­களை நிறை­வேற்ற காரிய அனு­கூ­லங்கள் கைகூடி வரும் நிலை­யி­ருக்கும்.

மாண­வர்­க­ளுக்கு கல்வி நிலையில் சிறப்­பான நல்ல முன்­னேற்­றங்கள் அமையும் நிலை இருக்கும். புதிய முயற்­சிகள் நல்ல வெற்­றி­களைத் தேடித் தரும். வர­வேண்­டிய கடன்­நிலை வர­வுகள் உங்­களை நாடி வரு­கின்ற நிலை­யி­ருக்கும். தொழில் நிலை பதவி உயர்­வு­க­ளுக்கும் இட­முண்டு. குழந்தைப் பேற்றை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பேறு கிடைக்கும் நிலை இருக்கும். இந்தக் குருப்­பெ­யர்ச்­சியின் மூலம் இடப ராசி அன்­பர்கள் தங்­களின் தேவை­களை சிரமம் இன்றி அலைச்சல் இன்றி மிகவும் சுல­ப­மாக அடை­யக்­கூ­டிய வழி வகைகள் அமையும் நிலை இருக்கும்.

எனவே நல்ல முயற்­சி­க­ளுக்கு சிறப்­பான வெற்­றிகள் அமையும் நிலை அதி­க­மா­கவே உண்டு. திட்டம் தீட்டி செயற்­படும் நீங்கள், இந்தக் குருப்­பெ­யர்ச்­சியின் மூல­மாக உங்­களின் திட்­டங்­களை நிறை­வேற்­றலாம். உங்­க­ளுக்கு நூற்­றுக்கு 80% நன்­மைகள் உண்டு.

மிதுன ராசி

(மிரு­க­சீ­ரிடம் 3, 4 ஆம் பாதம், திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2, 3 ஆம் பாதம்)

மன­திற்­குள்ளே பல விட­யங்­களை செயற்­ப­டுத்தி அமை­தி­யாக இருந்தே காரியம் நகர்த்தும் மிது­ன­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு “சுகஸ்­தானம்” எனப்­படும் 4 ஆம் இடம் குரு­ப­கவான் அமை­கின்றார். எடுக்­கின்ற முயற்­சி­க­ளிலே சற்று நிதா­னத்­தோடு செயற்­பட வேண்டும். தொழில் நிலை­களில் அலைச்சல் இழு­பறி என்­பன இருக்கும். மன­நி­லையில் சஞ்­ச­லமும் யோச­னை­களும் இருக்கும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலை ஏற்­படும். உடல் நிலைச் சுக­யீனம், மருத்­துவ செல­வுகள் இருக்கும். தாயார் வழியில் செல­வுகள் இருக்கும். தாயா­ருடன் கருத்து வேறு­பா­டுகள் அமையும் குடும்ப நிலையில் சிறு­ சிறு பிரச்­சி­னைகள், மனச்­சஞ்­சலம் என்­பன ஏற்­படும். தொழில் நிலை­களில் வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். புதிய முயற்­சி­களில் சிறு­ சிறு தடை­தா­மத நிலைகள் தொடரும். வழக்கு விவ­கா­ரங்­களில் இழு­பறி நிலை, பண­

வி­ரயம் என்­பன இருக்கும்.

எதையும் பொறு­மை­யோடும் நிதா­னத்­தோடும் செயற்­ப­டுத்த வேண்டும். பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சல நிலையும் தேவை­யற்ற பிரச்­சி­னை­களும் ஏற்­படும். குடும்ப நிர்­வா­கத்தில் குழப்ப நிலைகள் இருக்கும். மாண­வர்­க­ளுக்கு கல்வி நிலையில் நல்ல சிறப்­புகள் அமையும். பரீட்­சை­களில் அனு­கூலம் கிடைக்கும். திரு­மணம் போன்ற விட­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு சிறு­ சிறு இழு­பறி தாமத நிலைகள் தொடரும். உற­வி­னர்­க­ளுடன் தேவை­யற்ற மன­சஞ்­சல நிலைகள் தொடரும். பொது­வாக இந்தக் குருப்­பெ­யர்ச்­சியின் மூல­மாக பொறுமை நிதா­ன­முடன் செயற்­ப­டு­வதே மிகவும் நல்­லது. வியா­ழக்­கி­ழ­மை­களில் குரு­வ­ழி­பாடு செய்து வரவும். உங்­க­ளுக்கு நூற்­றுக்கு 45% நன்­மைகள் அமையும்.

கட­க ­ராசி

(புனர்­பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயி­லியம்)

கல­க­லப்­பான செயற்­பாடு கட­மை­யு­ணர்வுக் குறைவு கொண்ட கட­க­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு ஜெயஸ்­தா­ன­மா­கிய 3 ஆம் இடம் குரு­ப­கவான் சஞ்­சாரம் அமை­கின்­றது. பொது­வாக எடுக்­கின்ற முயற்­சி­களில் பொறுமை நிதானம் தேவை. தேவை­யற்ற அலைச்சல் நிலை­களை எதிர்­கொள்ள வேண்­டி­வரும். இருப்­பினும் உங்­களின் ராசி நிலைக்கு ரோக பாக்­கி­யஸ்த்­தான ஆதி­பத்­தியம் பெறு­கின்ற குரு­ப­கவான் பாக்­கி­யஸ்­தான நிலை பெற்று அமை­கின்­றதால் ஓர­ள­விற்கு எதையும் சமா­ளிக்­கக்­கூ­டிய நிலைகள் இருக்கும். புதிய முயற்­சி­களில் சற்று நிதா­னத்­தோடு செயல்­ப­டு­வது மிகவும் நல்­லது.

தொழில் நிலை­களில் இழு­பறி நிலைகள் வேலைப்­பளு என்­பன அதி­க­மாக இருக்கும். கடன் நிலை­களில் வழக்கு விவ­கா­ரங்­களில் இழு­ப­றிகள் தொட­ரு­கின்ற நிலைகள் அமையும். திரு­மணம் போன்ற சுப­கா­ரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­களுக்கு அப்­பலனில் சற்று தாமத நிலை இருக்கும். பெண்­க­ளுக்கு சஞ்­சல நிலைகள் அதி­க­மாக இருக்கும். குடும்ப நிலை­களில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் இருக்கும். மாண­வர்கள் கல்வி நிலையில் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்­சை­களில் மந்­த­மான நிலைகள் அமையும். பொது­வாக இந்தக் குருப் பெயர்ச்­சியின் மூல­மாக அதி­க­மான போராட்ட நிலைகள் இருக்கும்.

சகோ­த­ரர்­க­ளுடன் சிறு சிறு மன­சஞ்­சல நிலைகள் ஏற்­படும். பண­வ­ர­வு­களில் சிறிய மந்த கதி இருக்கும். வெளி­நாட்டு பிர­யா­ணங்­களில் இழு­பறி நிலை அமையும். வியா­ழக்­கி­ழ­மை­களில் குரு ப­க­வா­னுக்கு 21 கடலை மாலை­யாக அணி­வித்து மஞ்சள் பூவினால் அர்ச்­சனை வழி­பாடு செய்­வது மிகவும் நல்­லது. எந்த விட­ய­மா­னாலும் சற்று சிந்­தித்து நிதா­னத்­துடன் செயற்­ப­டு­வதே மிகவும் நல்­லது. உங்­க­ளுக்கு நூற்­றிற்கு 40% நன்மை அமையும் நிலை­யுண்டு.

சிம்­ம ­ராசி

(மகம், பூரம், உத்­தரம் 1ஆம் பாதம்)

திட்டம் வகுத்து அதன்­படி செயற்­பட்டு வெற்­றி­களைத் தொடும் சிம்­ம­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு தனஸ்­தானம் எனப்­படும் 2ஆம் இடம் குரு­ப­கவான் சஞ்­சாரம் அமை­கின்­றது. எதிர்­பார்க்­கின்ற விட­யங்­களை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­யக்­கூ­டிய அனு­கூ­லங்கள் இந்தக் குருப்­பெ­யர்ச்­சியின் மூலம் நீங்கள் பெற முடியும். தொழில் சார்ந்த மேன்­மைகள் பதவி உயர்­வுகள் என்­பன சிறப்­பாக அமையும் பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மாக இருக்கும்.

குடும்ப நிலையில் நல்ல மகிழ்­வான சிறப்­பான பலன்கள் ஏற்­படும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியங்களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­களுக்கு அப்­பலன் நிறை­வாக அமையும். வெளி­நாட்டு பிர­யாணம் எதிர்­பார்க்­கின்­ற­வர்­களுக்கு அப்­பலன் நிறை­வாக கிடைக்கும். பெண்­க­ளுக்கு குடும்ப நிலையில் நல்ல அனு­கூ­லங்­களும் உற­வினர் நண்­பர்­களின் மூலம் நன்­மை­களும் அமையும். எதையும் சிறப்­பாக செய்­யக்­கூ­டிய ஆளு­மையும் உத்­வே­கமும் அமையும். மாண­வர்கள் கல்வி நிலையில் மிகவும் சிறப்­பான முன்­னேற்றம் காணலாம்.

பரீட்­சை­களில் நல்ல சிறப்­புகள் அனு­கூ­லங்கள் அமையும் இந்தக் குருப் பெயர்ச்­சி­யா­னது எல்லா வகை­யிலும் சிறப்பும் அனு­கூ­லமும் தரு­வதாய் அமையும். நீண்­ட­கா­ல­மாக தடைப்­பட்ட பண­வ­ர­வுகள் மற்றும் வழக்கு விவ­கா­ரங்கள் என்­ப­ன­வற்றில் நல்ல அனு­கூல பலன்கள் உங்­க­ளுக்கு சார்­பாக அமையும்.

சென்ற ஆண்டு ஜென்­ம­கு­ருவின் சஞ்­சாரம் மூல­மாக பல­வ­கை­யிலும் சிர­மங்­களை எதிர்­கொண்ட உங்­க­ளுக்கு இந்தக் குருப்­பெ­யர்ச்சி மிக­மிக சிறப்­பான நல்ல பலன்­களைக் கொடுக்கும். இந்த குருப்­பெ­யர்ச்சி நூற்­றிற்கு 80% நன்­மைகள் தரும்.

கன்­னி ­ராசி

(உத்­தரம், 2,3,4 ஆம் பாதம் அத்தம், சித்­திரை 1,2 ஆம் பாதம்)

எப்­போதும் ஏதேனும் சஞ்­சலம் யோசனை என சிந்­தித்துக் கொண்டு இருக்கும் கன்­னி­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு “ஜென்­ம­குரு” சஞ்­சாரம் அமை­கின்­றது. உங்கள் ராசி­யி­லேயே குரு­ப­கவான் பெயர்ச்சி பெறு­கின்றார். பொது­வாக எந்த விட­ய­மாக இருப்­பினும் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்­ப­ட­வேண்டும். எடுக்கும் முயற்­சி­க­ளிலே தடை தாமத இழு­பறி நிலைகள் தொடரும் பலன் இருக்கும். தொழில் நிலை­களில் வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். மேல­தி­கா­ரி­க­ளுடன் தேவை­யற்ற சஞ்­ச­லங்கள் அமையும். தொழில் சார்ந்த திடீர் இட­மாற்றம் அல்­லது தொழில் இல்­லாத நிலை போன்ற பலன்கள் அமையும் நிலை இருக்கும். குடும்ப நிலையில் சஞ்­ச­லங்­களும் உற­வி­னர்­க­ளுடன் விரிசல் நிலை­களும் அமை­கின்ற பலன் இருக்கும். எந்­த­ வி­ட­ய­மாக இருப்­பினும் பொறு­மை­யுடன் செயற்­பட வேண்டும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மான நிலை­யி­லேயே அமையும். கொடுக்கல் வாங்கல் விட­யங்­க­ளிலும் சிக்கல் நிலைகள் அமையும். எதையும் திட்­ட­மிட்டுச் செய்ய முடி­யாத நிலை இருக்கும். கடன் பிரச்­சி­னை­க­ளிலும் சிக்கல் நிலைகள் தொடரும். பெண்­க­ளுக்கு தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­வரும். குடும்ப நிர்­வா­கத்தில் இறுக்­க­மான நிலைகள் தொடரும் பல­னி­ருக்கும். எனவே மிகவும் நிதா­னத்­துடன் செயற்­பட வேண்டும். மாண­வர்கள் கல்வி நிலையில் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும்.

கல்­வியில் மந்­த­மான நிலை இருக்கும். பரீட்­சை­களில் பொறுமை நிதா­னத்­துடன் செயற்­ப­ட­ வேண்டும். பொது­வாக இந்தக் குருப் பெயர்ச்சி உங்­களின் ராசி நிலைக்கு பல வகை­யிலும் சிக்கல் சிர­மங்­களை கொடுக்கும். உடல் நிலை சார்ந்த உபா­தைகள் மருத்­துவ நிலை செல­வுகள் சில­ருக்கு “சத்­திர சிகிச்சை” போன்ற நிலைகள் அமையும். எனவே உடல் நிலையில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். வியா­ழக்­கி­ழ­மை­களில் 21 கடலை மாலை­யாக கோர்த்து குரு­ப­க­வா­னுக்கு அணி­வித்து மஞ்சள் நிற புஷ்­பத்­தினால் அர்ச்­சனை வழி­பாடு மேற்­கொள்­வது மிகவும் நல்­லது. தேவை­யற்ற தலை­யீ­டு­களை தவிர்த்து செயல்­ப­டு­வதும் நல்­லது. குருப்­பெ­யர்ச்சி நூற்­றிற்கு 40% நன்­மைகள் தரும் நிலை­யுண்டு.

துலா ­ராசி

(சித்­திரை 3,4 ஆம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம்)

எதையும் தாங்கி நின்று போராடி நீதி­யோடு செயல்­ப­டு­கின்ற துலாம் ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு “விர­யஸ்­தானம்” எனப்­படும் 12ஆம் இடம் குரு­ப­கவான் சஞ்­சாரம். அமை­கின்­றது. ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் அமை­கின்ற நிலை இருக்கும். மன­நி­லையில் சற்று சஞ்­ச­ல­மான யோச­னைகள் சூழும். எடுக்கும் முயற்­சி­களில் சிறு சிறு இழு­ப­றிகள் இருக்கும்.

தேவை­யற்ற பகை­மை­களை சந்­திக்க வேண்­டி­வரும். பண­வ­ரவு தேவை­களைப் பூர்த்தி செய்யும். கொடுக்கல் வாங்­கலில் இழு­பறி நிலைகள் தொடரும். எதிர்­பா­ராத திடீர் செல­வுகள் அமையும். தவிர்க்க முடி­யாத சுப­வி­ர­ய­மாக பணம் செல­வாகும் குடும்ப நிலையில் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன் இருக்கும். தொழில்­சார்ந்த அலைச்சல் நிலைகள் சற்று அதி­க­மாக இருக்கும். உற­வினர் நண்­பர்­க­ளுடன் மன­வி­ரி­சல்கள் அமையும். கொடுக்கல் வாங்­கலில் நிதானம் தேவை.

கடன் நிலை­க­ளிலும் சற்று இழு­ப­றிகள் இருக்கும். பொது­வாக இந்தக் குருப்­பெ­யர்ச்­சி­யா­னது பெரு­நன்­மை­களை அதிஷ்­டங்­களை கொடுக்க வாய்ப்பு இல்லை. அத்­தோடு உங்கள் ராசி நிலைக்கு “ஏழரைச் சனி” சஞ்­சா­ரமும் அமை­கின்­றது. உடல் நிலை சார்ந்த சிறு சிறு உபா­தைகள் இடை­யி­டையே அமையும் நிலை­யி­ருக்கும் புதிய முயற்­சி­களில் சற்று நிதா­னத்­தோடு செயற்­ப­டவும் வழக்கு விவ­கா­ரங்­க­ளிலும் சிறு சிறு சிக்கல் இழு­பறி நிலை இருக்கும்.

பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சலம். எதிர்­பார்ப்­பு­களில் சிறு சிறு ஏமாற்றம். குடும்ப நிலையில் வாக்­கு­வா­தங்கள் என்­பன அமையும் பல­னி­ருக்கும். மாண­வர்கள் கல்வி நிலையில் சற்றுக் கூடு­த­லான முயற்சி மேற்­கொள்­வது மிகவும் நல்­லது. பரீட்சை நிலை­களில் மிகவும் பொறுமை, நிதானம் தேவை. பொது­வாக வியா­ழக்­கி­ழ­மை­களில் குரு­ப­க­வா­னுக்கு அர்ச்­சனை வழி­பாடு செய்து வரு­வது ஓர­ள­விற்கு அனு­ச­லங்கள் கொடுக்கும். உங்­களின் சாதுர்­யத்தின் மூல­மாக ஓர­ள­விற்கு நன்­மைகள் பெறலாம். குருப்­பெ­யர்ச்சி நூற்­றிற்கு 50% நன்­மைகள் தரும் நிலை­யுண்டு

விருச்­சி­க ­ராசி

(விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

மனத்­தை­ரி­ய­மான செயற்­பாடும் தன்­னா­திக்க முடிவும் அதிகம் கொண்ட விருட்சி­க­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு “லாபஸ்த்­தானம்” எனப்­படும் 11 ஆம் இடம் குரு­ப­கவான் அமை­கின்றார். உங்­களின் எதிர்­பார்ப்­பு­களை ஓர­ள­விற்கு அடை­யக்­கூ­டிய நிலை அமையும். தொழில் சார்ந்த முன்­னேற்றம் சிறப்­பாக இருக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மான நிலை­யிலே அமையும். குடும்ப நிலையில் மகிழ்­வான பலன்கள் இருக்கும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பாக்­கின்­ற­வர்­களுக்கு அப்­பலன் நிறை­வாக அமையும் நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் நிலையில் சுமூ­க­மான பலன்கள் அமையும். தொழில் சார்ந்த முன்­னேற்றம் சிறப்­பாக அமையும். புதி­ய­தொழில் நிலை அனு­கூலம் கிடைக்கும். பதவி உயர்­வு­களும் தொழில் சாந்த வெளி­நாட்டு பிர­யா­ணங்­களும் அமையும்.

பெண்­க­ளுக்கு மன மகிழ்வும் குடும்­பத்தில் சந்­தோஷ நிலை­களும் அமையும். உற­வி­னர்­க­ளுடன் மகிழ்­வான தொடர்­புகள் அமையும். மாண­வர்­களின் கல்வி நிலையில் சிறப்­பான முன்­னேற்றம் அமையும். பரீட்­சை­களில் தெளி­வான நிலை அமையும். எந்த விட­ய­மாக இருப்­பினும் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன் கொடுக்கும் நிலை இருக்கும். உங்­களின் ராசி நிலைக்கு “ஏழரைச் சனி” சஞ்­சாரம் அமை­வது இடை­யி­டையே சிறு சிறு காரியத் தடைகள் பிரச்­சி­னைகள் என்­பன ஏற்­பட்டு மறையும் உடல் நிலையில் சிறு சிறு சுக­வீ­னங்கள் ஏற்­பட்டு மறையும்.

இருப்­பினும் குருவின் சஞ்­சார பலன் உங்­க­ளுக்கு அனு­கூ­ல­மான சிறப்­பான பலன் கொடுக்கும். நீண்ட நாள் எதிர்­பார்­பு­களில் வெற்­றிகள் அமையும் நிலை­யி­ருக்கும். இந்தக் குருப் பெயர்ச்­சியின் மூலன் நன்­மை­யான பலா­ப­லன்கள் அமைய இட­முண்டு. மூத்த சகோ­தரர் மூல­மாக நன்­மை­யான பலன்கள் அமைய இட­முண்டு. தல யாத்­திரைப் பிர­யா­ணங்கள் அமையும் நிலையும் இருக்கும். எனவே இந்தக் குருப்­பெ­யர்ச்சி உங்­க­ளுக்கு எல்லா வகை­யிலும் அனு­கூலம் தரு­வ­தா­கவே அமையும். அதற்கு ஏற்ப காரிய செயல் புரிந்து வெற்றி பெறுக! குருப் பெயர்ச்சி நூற்­றிற்கு 75% நன்­மைகள் தரும் நிலை­யுண்டு.

தனுசு ராசி

(மூலம், பூராடம், உத்­த­ராடம் 1ஆம் பாதம்)

அதி­க­மான தைரி­யமும் தன்­னம்­பிக்­கையும் கொண்டு செயற்­படும் தனுசு ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு “ஜீவ­னஸ்த்­தானம்” எனப்­ப­டு­கின்ற 10 ஆம் இடம். குரு­ப­கவான் சஞ்­சாரம் அமை­கின்­றது. சற்று மத்­தி­ம­மான சுமா­ரான பலா பலன்­களே அமையும். எடுக்கும் முயற்­சி­களில் சிறு சிறு அலைச்சல், தாமத நிலைகள் அமையும் தொழில்­சார்ந்த அலைச்சல் வேலைப்­பளு தொழில் நிலையில் மாற்றம் தொழில் சார்ந்த பிர­யாணம் இட­மாற்றம் போன்ற பலா பலன்கள் அமையும் பண­வ­ரவு சற்று சுமா­ரான மத்­திய நிலை­யி­லேயே அமையும். குடும்ப நிலை­யிலே மந்­த­மான பலன் இருக்கும்.

எடுக்கும் முயற்­சி­களில் நிதானம் பொறுமை தேவை. தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலை தோன்றும். பெண்­க­ளுக்கு மன நிலைச் சோர்வு தேவை­யற்ற சஞ்­சல நிலை போன்ற பலன்கள் அமை­கின்ற நிலை இருக்கும்.

எதிர்­பார்ப்­பு­களில் ஏமாற்ற நிலைகள் இருக்கும்.

மாண­வர்கள் கல்வி நிலையில் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்­சை­களில் பொறுமை நிதானம் தேவை. எதிர்­பார்ப்­பு­களில் சிறு சிறு தடை இழு­ப­றிகள் அமையும். பொது­வாக அதி­க­மான அலைச்­சலும் காரி­யத்­தடை, இழு­பறி நிலை­களும் இருக்கும். பொறு­மை­யு­டனும் நிதா­னத்­து­டனும் செயல்­பட வேண்டும். கடன் நிலை­களில் இழு­பறி தடை இருக்கும். உங்­களின் ராசி நிலைக்கு “ஏழரைச் சனி” சஞ்­சா­ரமும் அமை­வது தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்குள் சிக்க வைக்கும்.

எனவே அதற்கு ஏற்ப உங்­களின் செயற்­பாடு அமைய வேண்டும்.

திரு­மணம் போன்ற சுப காரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­களுக்கு அப்­பலன் சற்று தாமத இழு­பறி நிலை­களைக் கொடுக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்­களின் செயற்­பா­டு­களை வழி நடத்தி செயற்­ப­டுத்­து­வது மிக மிக நல்­லது. வியா­ழக்­கி­ழ­மை­களில் குரு­ப­க­வா­னுக்கு கடலை மாலை அணி­வித்து மஞ்சள் புஷ்ப அர்ச்­சனை செய்து வரு­வது நன்மை அளிக்கும். குருப் பெயர்ச்சி நூற்­றிற்கு 45% நன்­மைகள் தரும் நிலை­யுண்டு.

(தொடரும்)

மக­ர­ராசி

(உத்­த­ராடம் 2,3,4ஆம் பாதம், திரு­வோணம், அவிட்டம், 2ஆம்­பாதம்)

அச்­ச­மின்றி எதையும் நேருக்கு நேராக பேசு­கின்ற குண இயல்பும் தைரி­ய­மான செயற்­தி­றனும் கொண்ட மக­ர­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு பாக்­கிஸ்­தா­ன­மா­கிய 9 ஆம் இடம் குரு­ப­கவான் சஞ்­சாரம் அமை­கின்­றது. எல்லா வகை­யி­லுமே, உங்­களின் எதிர்­பார்ப்­பு­களை, நிறைவு செய்­கின்­ற­தாக இந்த குருப் பெயர்ச்சி பலன்கள் அமையும். தொழில் நிலை­க­ளிலே நல்ல முன்­னேற்றம் இருக்கும். பதவி உயர்­வு­களும், தொழில்­சார்ந்த லாபங்­களும் சிறப்­பாக அமையும் நிலை உண்டு. குடும்­பத்தில் நல்ல அனு­கூ­ல­மான பலன்கள் அமையும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மான நிலை­யிலே அமையும். திரு­மணம் போன்ற சுப­கா­ரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­கட்கு அப்­பலன் நிறை­வா­ன­தாக அமையும். புதிய முயற்­சி­களில் ஈடு­பா­டு­கொள்ள உள்­ள­வர்­கட்கும், காரிய வெற்­றிகள் மிகவும் சிறப்­பாக அமையும் நிலை உண்டு. பெண்­க­ளுக்கு மன நிலையில் நல்ல மகிழ்வும் எதிர்­பார்ப்­பு­களில் வெற்­றியும் சிறப்­பாக இருக்கும். குடும்ப நிர்­வாகம் மனத் திருப்­தியைக் கொடுக்கும். உற­வி­னர்­களின் மூலம் நன்­மை­களும் எதிர்­பா­ராத நல்ல உத­வி­களும் கிடைக்கும். மாண­வர்­களின் கல்வி நிலையில், அனு­கூ­ல­மான நல்ல பலன்கள் கிடைக்கும். பரீட்­சை­களில் எதிர்­பார்ப்­பு­களை அடை­யக்­கூ­டிய அனு­கூ­லங்கள் அமைய இட­முண்டு. நீண்­ட­கா­ல­மாக வர­வேண்­டிய வர­வுகள் உங்­களை நாடி­வரும். வழக்கு விவ­கா­ரங்­களில் சுமு­க­மான பலன் அமையும். தந்­தையார் வழி பூர்­வீக சொத்­துக்கள் உங்­களை சாரும் நிலை இருக்கும். எதையும் சமா­ளித்து செயற்­ப­டக்­கூ­டிய ஆற்­றலும், மனத்­தை­ரியம் இருக்கும். வெளி­நாட்டு பிர­யாண அனு­கூ­லங்கள் அமையும் பலன் இருக்கும். எதிர்­பா­ராத வெளி­நாட்டு சுற்­றுலா செல்லும் நிலை­களும் அமையும். சென்ற ஆண்டு குருப்­பெ­யர்ச்­சியில் பட்ட சிர­மங்­க­ளுக்கு எல்லாம் இந்த ஆண்டில் நல்ல சிறப்­பு­களை நீங்கள் பெறக்­கூ­டிய நிலை­களை இந்த ஆண்டில் காணலாம். குருப்­பெ­யர்ச்சி நூற்­றிற்கு 80% நன்­மைகள் தரும் நிலை­யுண்டு.

கும்­ப­ராசி

(அவிட்டம் 3, 4ஆம் பாதம் , சதயம், புரட்­டாதி 1,2,3 ஆம் பாதம்)

அமை­தி­யா­ன­வர்கள் எனும் போர்­வையில் அட்­ட­கா­ச­மான செயல்­பாடு கொண்ட கும்­ப­ராசி அன்­பர்­களே! உங்­களின் ராசி நிலைக்கு “அட்­ட­மஸ்த்­தானம்” எனப்­படும் 8 ஆம் இடம் குரு­ப­கவான் சஞ்­சாரம் அமை­கின்­றது. எடுக்­கின்ற முயற்­சி­களில் நிதா­னமும், பொறு­மையும் தேவை. தொழில் நிலை­களில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் சூழும். வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். மனச்­சாஞ்­சலம் உடல் நிலை, சோர்வு போன்ற நிலை அமையும். திட்­ட­மிட்டு எதையும் செய்ய முடி­யாத நிலை இருக்கும். பண­வ­ரவு சற்று சுமா­ரான மத்­திம நிலை­யி­லேயே அமையும். குடும்ப நிலையில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் அமையும். உற­வி­னர்­க­ளுடன் மன­வி­ரிசல் நிலை ஏற்­படும். எதையும் திட்டம் இட்­ட­படி செய்ய முடி­யாத நிலை இருக்கும். கடன் நிலை­களில் இழு­பறி நிலை இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சிக்கல் நிலை இருக்கும். உடல் நிலை உபா­தை­களும் மருத்­துவ செலவும் அதி­க­மாக இருக்கும். ஒரு சில­ருக்கு “சத்­தி­ர­சி­கிச்சை” அமை­கின்ற நிலையும் ஏற்­படும். எனவே சற்று அதி­க­மான கவனம் உடல் நிலையில் எடுக்க வேண்டும். திரு­மணம் போன்ற சுப­கா­ரியம் எதிர்­பார்க்­கின்­ற­வர்­கட்கும் அப்­பலன் சற்று இழு­பறி தாம­த­நி­லை­களைக் கொடுக்கும். பெண்­க­ளுக்கு மன நிலையில் யோச­னைகள் அதி­க­மாக இருக்கும். குடும்ப நிர்­வா­கத்தில் இறுக்­க­மான நிலை இருக்கும். எனவே நிதா­ன­மாக செயற்­ப­ட­வேண்டும். மாண­வர்­களின் கல்வி நிலையில் அதி­க­மான கவனம் எடுக்க வேண்டும். மந்­த­மான நிலைகள் இருக்கும். பரீட்­சை­களில் அதி­க­மான முயற்­சி­யோடு செயற்­ப­ட­வேண்டும். எனவே எல்லா வகை­யிலும் இந்தக் குருப் பெயர்ச்­சி­யா­னது சற்று அதி­க­மான போராட்ட நிலையைக் கொடுக்­கின்­றதாய் இருக்கும். எந்த விட­ய­மாக இருப்­பினும், உங்­க­ளுக்கு தேவை­யற்ற விட­யங்­களில் வீண் தலை­யீடு கொள்­வதை தவிர்த்துக் கொள்­ளுங்கள். நீங்கள் உண்டு உங்­களின் வேலை­யுண்டு என இருப்­பதே உங்­க­ளுக்கு மிகவும் நல்­லது. வியா­ழக்­கி­ழமை தோறும் குரு­ப­க­வா­னுக்கு கடலை மாலை அணி­வித்து மஞ்சள் அர்ச்­சணை செய்­யவும். குருப்­பெ­யர்ச்­சி­யா­னது நூற்றிற்கு 40% நன்மை தரும்.

மீனராசி

(புரட்டாதி 4ஆம் பாதம், உத்தராட்சி, ரேவதி)

சாதித்து செயல்படக்கூடிய வல்லமை கொண்ட ஆளுமையானராக மீனராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு “களத்திரஸ்தானம்” எனப்படும். 7 ஆம் இடம் குருபகவான் சஞ்சாரம் அமைகின்றது. எடுக்கும் முயற்சிகளில் ஓரளவிற்கு அனுகூலம் அமையும். குடும்ப நிலையில் அனுகூலமான பலன்கள் அமையும். மன நிலையில் ஓரளவு சந்தோஷமான பலன்களுக்கு இடமிருக்கும். கணவன்,மனைவி ஒற்றுமைகள் மிகவும் அனுகூலமானதாக அமைந்திருக்கும். எதையும் திட்டமிட்டு செயற்படுத்த ஒரு வழிவகை உங்களுக்கு அமையும் நிலை இருக்கும். குடும்ப உறவினர்களுடன் அந்நியோன்யம் சிறப்பாக அமையும். உங்களின் மன விருப்பம் நிறைவேறக்கூடிய நிலைகள் அமையும். பணவரவு ஓரளவிற்கு தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற நிலை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் அனுகூலமான நிலையைக் கொடுக்கும். தொழில் சார்ந்த முன்னேற்றம் ஓரளவிற்கு சிறப்பாக அமையும் நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கள் விடயங்களில் ஓரளவிற்கு சுமுகமான நிலை அமையும். எனவே எண்ணங்களை ஈடேற்றக்கூடிய நிலை இருக்கும். நீண்ட நாள் நண்பர்களின் உறவுகள் தொடருகின்ற நிலை இருக்கும். மனைவி வழி மூலமாக நன்மைகள் அமையும் நிலை இருக்கும். எனவே இந்தக் குருப்பெயர்ச்சி எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கு நிறைவு செய்யும் நிலையுண்டு. மாணவர்களின் கல்வி நிலையில் சிறு சிறு மந்தமான நிலை இருக்கும். இருப்பினும் கல்வி நிலையில் பாதிப்பு அமைய வாய்ப்பு இல்லை. பரீட்சைகளில் அனுகூலமான பலன் அமையும். எதையும் நிதானத்தோடும் பொறுமையோடும் செயற்பட்டால் அனுகூலமான வெற்றிகள் கிடைக்கும் நிலை உண்டு. இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களின் எண்ணங்களை ஓரளவிற்கு நிறைவேற்றக்கூடியதாய் இருக்கும். இருப்பினும் வியாழக்கிழமைகளில் குருவழிபாடு மேற்கொள்வது சிறப்பு இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் நூற்றிற்கு 60% நன்மை உண்டு.

Facebook Comments