சிவில் விமான சேவை பணிப்பாளர்களின் 53ம் ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது.

சிவில் விமான சேவை தொடர்பிலான ஆசிய பசுபிக் பிராந்திய வலய மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாக உள்ளது.

இம்முறை இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு இலங்கை சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ நிமல்சிறியினால் வகிக்கப்பட உள்ளதுடன், எதிர்வரும் 5ம் திகதி வரையில் மாநாடு நடைபெறவுள்ளது.

32 நாடுகளின் பங்களிப்பில் நடைபெறும் இந்த மாநாடு இதற்கு முன்னதாக 1990ம் ஆண்டில் நடைபெற்றது.

சிவில் விமான சேவை நிறுவனங்களின் தற்போதைய தன்மை, பிராந்திய வலய நாடுகள் எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக நிமல்சிறி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Facebook Comments