மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் வாவியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு சடலமான மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சிறுவன் சுயாதீனம் அற்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மட்டக்களப்பு, களுதாவளையில் இடம் பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த குழந்தை விபத்தின் போது தவறி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த குழந்தை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைளுக்கா மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.

Facebook Comments