ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இதற்கான உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இதற்கான கடிதப்பரிமாறல்கள், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தலைவர் அஜித் டயஸ் ஆகியோருக்கு இடையில் மும்பாயில் வைத்து பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இந்தியா பிரசன்னம் வலுப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜாக்குலின், சிறுவயதில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பயணம் செய்யும் தமது நாட்டின் விமானசேவையில் தூதுவராக நியமிக்கப்பட்டமை பெருமையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments