தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது.

சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார்.

ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.

பெண்களின் மாங்கல்யம் நிலைக்கவும், மணமாகாத மகளீர் நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும், செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்திக்காகவும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

Facebook Comments