எயிட்ஸ் நோய் அதிகரித்து வரும் நாடுகளின்வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேசிய எயி;ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே நேற்று கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் காலங்களில் எயிட்ஸ் நோய் அதிகரிக்கக்கூடிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகின் 79 நாடுகள் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

இலங்கையில் கடந்த ஏழு மாத காலப் பகுதியில் எச்.ஐ.வீ. நோய்த் தொற்று பரவிய 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 4200 பேர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் 25 வீதமானவர்களே சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக முயற்சிக்கின்றார்கள் அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments