வெளிநாட்டு மதுபான வகைகள் சட்டவிரோதமான முறையில் தருவிக்கப்படுவதனால் 600 கோடி ரூபா வரி இழப்பு ஏற்படுதவாகத் தெரிவிகப்படுகிறது.

பெருமளவில் வெளிநாட்டு மதுபான வகைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தக் கூடிய குறிப்பிட்டளவு நிதி இழக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் தருவிக்கப்படுவதைன தடுக்க விசேட தடுப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு மதுபான வகைகள் தருவிக்கப்படுவது பற்றிய விபரங்கள் இருந்தால் அது குறித்து 0112-484500 – 0112-484600 – 0112-484700 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகள் தருவிக்கப்படுவதனை தடுக்க விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Facebook Comments