பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். தெலுங்கில் அவர் நடித்த ‘ஜென்டில்மேன்’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிறைய படங்கள் அவரை தேடி வருகின்றன.

இப்படத்திற்க்கு முன்பு ‘ஜூலியட்-லவர் ஆப் இடியட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சில நாட்கள் நடித்த இவர் பின் திடீரென்று படப்பிடிப்புக்கு வராமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார். பட குழுவினர் பலமுறை அழைத்தும் கால்ஷீட் கேட்டும் தர மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பட குழுவினர் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். அவர்கள் விசாரித்து நிவேதாவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஜூலியட் பட படப்பிடிப்பில் பங்கேற்று விரைவில் படத்தை முடித்து தரவேண்டும்.

இல்லாவிடில் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அதிரடியாக கூறினர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிவேதா, உடனடியாக ஜூலியட் பட குழுவினருக்கு கால்ஷீட் ஒதுக்கி தந்ததுடன் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தும் வருகிறார்.

Facebook Comments