இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு கெளதம் மேனனின் ‛அச்சமென்பது மடமையடா’, செல்வராகவனின் ‛கான்’ படத்தில் நடித்தார், இதில் கான் படம் டிரப்பாகிவிட்டது, அச்சமென்பது மடமையடா ரிலீஸாக முடியாமல் நிதிச்சிக்கலில் இருக்கிறது. இதனிடையே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக ஸ்ரேயா சரண் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்டகாட்சிகள் திண்டுக்கல்லில் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகாவும் இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கசிய ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை அறிந்த ஹன்சிகா பதறிவிட்டாராம். இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து, ‘இது வதந்தி… உண்மையில்லை!’ என ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.

சமீபத்தில் இது நம்ம ஆளு படத்தில் தன் மாஜி காதலி நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சிம்பு. அதன் தொடர்ச்சியாக தனது இன்னொரு காதலியாக இருந்த ஹன்சிகாவையும் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே ஹன்சிகா தடலாடியாக நடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.

Facebook Comments