கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் .

இந்த விபத்து மட்டக்களப்பில் இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – புன்ன சோலையை சேர்ந்த இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments