கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்தனர். ‘தள்ளிப் போகாதே’ பாடலை படம்பிடிக்க சிம்பு ஒத்துழைக்காததால் இப்பட ரிலீஸ் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் சிம்பு-கவுதம் மேனன் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆகஸ்ட் 19ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

Facebook Comments