இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற செட்டில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இன்று முதல் இந்த படத்தின்  அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் நடந்து வருவதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜய், கீர்த்திசுரேஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார் என்ற செய்தியை பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கி வருகிறார். வரும் செப்டம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Facebook Comments