இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘தெறி’ படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் அடுத்த படம் எது? என்ற கேள்வி கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்குவார் என்றும் இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் அட்லி தற்போது ‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, தம்பி ராமையா மற்றும் ஜெய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை Lke ராதா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் அட்லி இன்னொரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கவுள்ளதாகவும், சூர்யா பாலகுமாரன் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான பாலகுமாரனின் மகன் தான் இந்த சூர்யா பாலகுமாரன் என்பதும், இவர் அட்லியின் உதவியாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Facebook Comments