சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அமைப்பை உருவாக்கிய ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதை கண்டித்தே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள்.

சனச வங்கியை மக்கள் மத்தியில் பிரசித்தி பெறச் செய்தவரே குறித்த சங்கத்தை ஸ்தாபித்தவராவார். அரசாங்கத்தின் உதவியுடன் வங்கித் தலைவர்களே இவரை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.

இவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் கலகத்தடுப்புப் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நன்றி
தமிழ்வின்625.0.560.320.160.600.053.800.668.160.90

Facebook Comments