வவுனியா மேல் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று ( 03.08.2016) காலை மூவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதவான் திரு.சசிமகேந்திரன் இன்று ( 03.08.2016) இருவருக்கு மூன்று வருடங்கள் கடுழிய சிறைத்தண்டணையும் சங்கிலிவேல் ராஜாசிவா, விஜயசேகர பத்திரஜகே லயனல்விரசிங்க பண்டார,எரேத் முதியன்சிலாகே இகலவலகே மஞ்சுலஜெயசேன ஆகிய மூவருக்கு மரண தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்

Facebook Comments