எதிர்ப்பு ஊர்­வ­லத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சிக்கு எதிராக கூக்­குரல் எழுப்­பி கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியை அசௌகரியத்துக்கு உள்­ளாக்­கிய சிறுவன் தொடர்­பாக விசா­ரிக்­கப்­படும் என பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார்.

பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், ஒன்றிணைந்த கூட்டு எதிர்­க்கட்­சி­யி­னரால் நேற்று முன்­தினம் நிறை­வுக்கு கொண்டு வரப்­பட்ட தேசிய அர­சாங்­கத்­துக்கு எதி­ரான எதிர்ப்பு பேர­ணியின் இறுதி நாளின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதிராகவும் கட்­சியை பல கொடும் சொற்கள் கொண்டு விமர்­சித்தும் கூக்­குரல் எழுப்­பியும் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியை அசௌகரியத்துக்கு ள்­ளாக்­கிய சிறுவன் தொடர்­பாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட உள்­ளன.

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட ஒரு சிலரை தவிர ஏனைய அனைத்து ஆத­ர­வா­ளர்­களும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள். கூட்டு எதி­ர­ணியின் அங்­கத்­த­வர்­க­ளான விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, குமார வெல்­கம போன்றோர் தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்­சிகளை சின்­னா­பின்­ன­மாக ஆக்­கி­ய­வர்கள்.

ஆனால் தற்­போதைய சூழ்­நி­லையில் தம் மீது இருக்கும் கறை­களை நீக்­கவும், தம் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்ற குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்கும் மஹிந்த தரப்­பி­ன­ரோடு இணைந்து கட்­சியை பிளவு படுத்தும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

எனவே இவர்கள் தான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு எதிராாக கூக்­குரல் இட்டு தமது ஏகோ­பித்த எதிர்ப்பை வெளி­யி­டு­மாறும் கட்­சியை விமர்­சிக்­கு­மாறும் கூறி­யி­ருக்கக் கூடும்.

எவ்­வாறு இருந்­தாலும் கூக்­குரல் எழுப்­பியும் கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியை அசௌகரியத்துக்குள்­ளாக்­கியும் கொடும் சொற்­களால் கட்­சியை இழி­வு­ப­டுத்­திய சிறு­வ­னுக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

மேலும் தற்­போ­தைய சூழ்­நி­லையில் நாட்டில் இருக்­கின்ற அர­சியல் அமைப்பின் பிர­காரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவுக்கு ஆட்­சிக்கு வரு­வ­தற்­கான தகு­திகள் இல்லை. அவர் ஏற்­க­னவே இரு தட­வைகள் ஜனா­தி­பதி பத­வியை அலங்­க­ரித்து விட்டார். மூன்­றா­வது முறை­யா­கவும் அவர் ஜனா­தி­ப­தி­யாக வர நினைக்­கின்ற கனவுடன் அவர் செயற்பட்டு வருகின்றமை பகல் கனவாகும். அதனை மறந்து அரசாங்கத்துக்கு எதிராக பாத யாத்திரையில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்க முடியாது. தேசிய அரசாங்கம் தொடர்ச்சியாக 05 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என்றார்.

Facebook Comments