அவுஸ்­தி­ரே­லி­யாவில் முள்­ளந்­தண்டு பாதிப்­புக்­குள்­ளான நிலையில் விருத்­தி­ய­டைந்த 24 வார சிசு­வுக்கு தாயின் கருப்­பையில் வைத்து சிக்­க­லான அறுவைச் சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்டு மருத்­து­வர்கள் சாதனை படைத்­துள்­ளனர்.

குயீன்ஸ்­லாந்தில் பிறிஸ்பேன் நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னையில் குயீன்ஸ்­லாந்து மற்றர் மருத்­து­வ­மனை மற்றும் அமெ­ரிக்க வண்­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 40 மருத்­து­வர்கள் மற்றும் மருத்­து­வத்­தா­தி­களைக் கொண்ட குழுவினரால் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவைச் சிகிச்சை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை செய்திகளை வெளியிட் டுள்ளன.

தாயின் கருப்பையிலிருந்த அந்த சிசுவிற்கு முதுகெலும்புப் பிளவு என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அந்த இயற்கைக் குறைபாட்டை ஆரம்பத்திலேயே சீர்செய்து குழந்தை ஆரோக்கிய நிலையில் பிறப்பதை உறுதிசெய்ய மருத்துவர்கள் மேற்படி அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இத்தகைய அறுவைச்சிகிச்சை இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

Facebook Comments