சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தவாரம் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் தென்கொரியாவுக்குப் பயணமாகவுள்ளார்.

எனினும், இந்தப் பயணத்துக்கான காரணம் எதையும், கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை.

மகிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த பின்னர், அண்மையில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் அவர் உகண்டாவுக்கும், ஜப்பானுக்கும் பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments