அண்மைக்காலமாக, புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் இனங்காணப்படாத மர்மமான நோய் தாக்கத்தினால் உயிரிழக்கின்ற சம்பவங்களும், அது தொடர்பிலான செய்திகளும் பரவலாக வருகின்றன.

இதுகுறித்து, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, அண்மைக்காலமாக உயிரிழக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில், விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மிக விரைவில் இவ்வாறான விசேட மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பது தொடர்பில் துறைசார் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், கலந்துரையாடலின் பின்னர் எவ்வாறான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்படுமென்றும், செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments