ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு போய் சேர்த்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வெற்றியால் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் விஜய்யை அடுத்து இன்னொரு பெரிய ஹீரோவான சூர்யாவுடன் கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘சிங்கம் 3’ படத்தை அடுத்து ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கீர்த்திசுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படமும் அவருடைய மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments