அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிறிலங்காவின் கவர்ச்சி நடிகையுடன் நாமல் கொண்டிருந்த உறவு தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் பாத யாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதற்கு நாமல் ராஜபக்ஷ தலைமை வகித்திருந்தார்.

இதன்போது நாமலுடன் நடிகை மதுஷா ரூபசிங்க மிகவும் நெருக்கமாக காணப்பட்டதுடன், ஆடிப்பாடிய சம்பவங்களும் பலராலும் அவதானிக்க முடிந்தது. எனினும் யாத்திரையின் இறுதிநாளான அன்று மனுஷாவை காணமுடியவில்லை என குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பி்ல் பாதயாத்திரையின் போது நாமலின் அருகில் இருந்த ஒருவரிடம் வினவிய போது சில தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாத யாத்திரையின் முதல் மூன்று நாட்கள் நாமல் அருகிலேயே மதுஷா பயணித்துள்ளார். இருவரும் மிகவும் வினோதமாக பாத யாத்திரையில் பயணித்துள்ள போது, பாதயாத்திரை தொடர்பான காட்சிகள் நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஔிபரப்பு செய்யப்பட்டன.

பாத யாத்திரையில் கலந்துக் கொள்ளாத போதிலும், நாமலின் தாயாரா ஷிரந்தி ராஜபக்ஷ இது தொடர்பிலான தகவல்களை தொடர்ந்து ஆராய்ந்துள்ளார். நாமல் ராஜபக்ஷ பேஸ்புக் நேரடி காணொளிகளை ஔிபரப்புவதில் ஆர்வமாக இருந்தார்.

இந்த காணொளிகளில் மதுஷா ரூபசிங்க நாமலின் அருகிலேயே பயணித்ததை அவதானித்த ஷிரந்தி ராஜபக்ஷ ஆத்திரமடைந்து, நாமலின் பாதுகாப்பாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். இதன்போது மதுஷாவுடன் தொலைபேசியில் உரையாடிய ஷிரந்தி கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஷிரந்தி, மதுஷாவை திட்டியுள்ள நிலையில் அடுத்த நொடியே மதுஷா அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

பாத யாத்திரை நிறைவடையும் வரையில் மதுஷா நாமல் இருந்த திசைக்கு வரவில்லை என தெரியவருகிறது.

Facebook Comments