கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா படத்தில் இருந்தால் போதும், அவர் ஒரியா, உகாண்டா நாட்டு மொழிகளில் நடித்திருந்தால் கூட நம்மூருக்கு டப்பிங் அடித்து கல்லா கட்டும் வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், கதை நன்றாக இருந்தால் இளம் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கத் தயார் என்று இறங்கி வர முடிவெடுத்துவிட்டாராம்.

இதனால், நயனுடன் ஜோடி சேரும் ஆசையில் பல இளம் ஹீரோக்களும் இயக்குனர்களிடம் நச்சரிக்கத் தொடங்கி விட்டனர். அதேநேரம் நயனின் முடிவைப் பின்பற்றி சில சீனியர் நடிகைகளும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேருவதுடன், சீனியர் ஹீரோக்களுடன் நடிக்கத் தயக்கம் காட்டுகின்றனராம். இதனால் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடி கிடைக்காத நிலை கோலிவுட்டின் நிலவுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Facebook Comments