குருப்பெயர்ச்சியினால் தமக்கு அதிஷ்டம் கிட்டுமா இல்லையா என்பதை அறிவதற்கு நம்மவர்களில் சிலர் ஆவல்படும் இந்த நாட்களில் பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியிலுள்ள குடும்பப்பெண் ஒருவருக்கு யூரோமில்லியன் மூலம் 61 மில்லியன் பவுண்ஸ் அதிஷ்டம் அடித்துள்ளது.

இலங்கைப் பெறுமதியில் இது பதினோராயிரம் கோடி ரூபாவுக்கு மேல் (உங்களில் பலரின் பெருமூச்சு சத்தம் கேட்கிறது.) சோனியா டேவிஸ் என்ற இந்தப் பெண்மணிக்கு இந்த அதிஷ்டம் கிட்டியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதையும் உள்ளது.

தனது தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோய்க்கான அறுவைச்சிகிச்சையை அமெரிக்காவின் புளோரிடா நகரில் கடந்தவாரம் மேற்கொண்டபின்னர் அங்கிருந்து தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது சோனியாடேவிஸ், ஒருவிடயத்தை சொல்லியிருக்கிறார்.

அதாவது புற்றுநோய் அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் அதன் மூலமாக ஏற்படக்கூடிய மரணத்தை ஏமாற்றிய தனக்கு அதிஷ்டம் இருப்பதாகவும் இதனால் தனக்காக யூரோமில்லியன் அதிஷ்டசீட்டுக்களை வாங்குமாறும் கேட்டிருக்கிறார்.

தனது தாயின் கோரிக்கைப்படியே கடந்த வெள்ளியன்று மாலை அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் யூரோமில்லியன் அதிஷ்டச்சீட்டுக்களை வாங்கியிருக்கிறார் மகள். அதில் ஒரு சீட்டுக்கே முதற்பரிசான 61 மில்லியன் பவுண்ஸ் அதிஷ்டம் அடித்துள்ளது.

தற்போது தனது குடும்பத்திலுள்ள 5 உறுப்பினர்களுக்கும் (தான், தனதுகணவர் இரண்டு மகள்மார் மற்றும் ஒருமகளின் சிநேகிதர்) ஆகியோருக்கு 61 மில்லியன் பவுண்ஸ் பணத்தை ஒவ்வொருவருக்கும் தலா 12.2 மில்லியன்படி பகிர்ந்தளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

பார்த்தீர்களா? கொடுக்கிற தெய்வம் சும்மா கொடுக்கவில்லை. புற்றுநோயையும் குணமாக்கி அதிஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது.

Facebook Comments