சிரமசக்திவேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

கிளிநொச்சி  இளைஞர் சேவை மன்றத்தின் யுத் கோட் ரலன்ற் சிரமசக்திவேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகள் கிளிநொச்சி பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி  பிரதேசசெயலக இளைஞர்கழகங்களுக்கு இடையில் ஆரம்பம்

நாடளா வியரீதியில் நடை பெறுகின்ற இவ் யுத் கோட் ரலன்ற்  சிரமசக்திவேலைத்திட்டத்தின் நேர்முகத்தேர்வுகளில் நாடலாவியரீதியில் 1500 இளைஞர்கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு தலா 75000ரூபா  வழங்கப்பட்டு அவர்களது பிரதேசத்தில் கழகத்தினால் 150000 ரூபா திரட்டப்பட்டு மொத்தமாக225000 ரூபாய் பெறுமதியில்  சிறந்த செயற்திட்டம் ஒன்றினை முடிக்க வேண்டும் அவ்வாறு முடிக்கின்ற செயற்திட்டத்தில் நாடளாவியரீதியில் முதலாமிடத்தினைப் பெறுகின்ற கழகத்திற்கு பத்துமில்லியன் ரூபாய் வழங்கப்படும் அத்துடன் எட்டு இடங்களினை பெறுகின்ற கழகங்களுக்கு தலா ஒரு மில்லியன் பரிசாக வழங்கப்படும் இப் போட்டிக்காக கிளிநொச்சியில் இருந்து பதினோரு இளைஞர்கழகங்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகளே நடைபெற்றுவருகின்றன

 

 

இன்று காலை பத்துமணியளவில்  பூநகரி பிரதேச செயலக மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய  இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் என் குபேந்திரா  தலைமயில் நடைபெற்று தொடர்ந்து  இரண்டுமணியளவில்  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மண்டபத்திலும் நடைபெற்றது இன்  நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட தேசிய  இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் என் குபேந்திரா இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர்கழக  உறுப்பினர்கள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்

Facebook Comments