திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது என்பவர் வீரமரணம் அடைந்தார்.

இந்த விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் போது படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பனியின் போது பிற தீயணைப்பு வீரர்களும் காயம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமதுக்கு துபாய் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Facebook Comments