பாகுபலி 2 படத்தின் தமிழக தியேட்டர் உரிமை மட்டும் ரூ. 45 கோடிக்கு வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படத்தை கண்டு வியக்காதவர் எவரும் இலர்.

பாலிவுட்டையே அதிர வைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்தை ராஜமவுலி எடுத்து வருகிறார். முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் பிரமாண்டத்திற்கு குறைவிருக்காது. இந்நிலையில் ‘பாகுபலி 2’ வின் தமிழக தியேட்டர் உரிமை ரூ.45 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வாங்கியது யார் என்ற விபரத்தை படக்குழுவினர் வெளியிடவில்லை. சூர்யா மற்றும் ஸ்ரேயா நடித்திருக்கும் இப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சண்டை காட்சிக்காக அரை மணிநேரம் ஒதுக்கியுள்ளார் ராஜமவுலி. இதுவே பிரமாண்டத்தின் இரண்டாம் பகுதி!!!

Facebook Comments