யாழ். மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த சண்முகம் சிவசங்கரன் (வயது 48) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி வந்த புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு காது கேட்காது எனக்கூறும் உறவினர்கள் புகையிரதக் கடவையில் சமிக்ஞை ஒலித்தபோதும் அதனை கேட்க முடியாத நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தமது பகுதிக்கு புகையிரதக்கடவை இல்லாமையினை எதிர்த்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு வந்த சுன்னாகம் பொலிஸார் புகையிரதக் கடவை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் குறித்த கடவைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

 

Facebook Comments