அசுத்தமான கடல் நீரால், தான் கர்ப்பமானதாக ஒலிம்பிக் தடகள வீராங்கனை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் வருகிற 5 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கிறது, இந்த போட்டியில் பங்கேற்கவிருக்கும் வீரர்களுக்கு சிறப்பு வசதிகளை பிரேசில் அரசு செய்து கொடுத்துள்ளது.

ஆனால் சுகாதரமற்ற கழிவறைகள், குடிநீர், விளக்கு வசதியற்ற மாடிப்படிகள் இருப்பதால் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது என பல்வேறு நாட்டு வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் வீரர்களுக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையில், நீச்சல் வீராங்கனை அல்வில்டா ஜென்சன்(27) கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பரிசோதனை முடிவை கேட்டு அதிர்ச்சியடைந்த அவில்டா, நான் கடந்த 3 மாதங்களாக பாலியல் உறவு வைத்துக்கொள்ளவில்லை, அப்படியிருக்கையில் நான் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

போட்டி நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை அறிந்துகொள்வதற்காக கடந்த 12 ஆம் திகதி கடல் வழியாக பயணித்து பிரேசில் வந்தேன்.

அப்போது கடலில் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் மற்றும் ஊசிகள் மிதப்பதை பார்த்தவுடன் அறுவருப்பாக இருந்தது, மிகவும் அசுத்தமாக இருந்த கடல் நீரில் பயணித்ததன் விளைவாக எனக்கு நோய்கள் வரும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் இந்த மாசுபட்ட கடல் நீரால் நான் கர்ப்பமடைந்துள்ளேன் என கூறியுள்ளார்.

ரியோ பகுதியில் உள்ள கடலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்துக்கிடக்கின்றன, இதனை அப்பகுதி வாழ் மக்கள் சேகரித்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த நீரில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இந்த நீரினை அருந்தும்போது கடுமையான வயிற்றுவலி, சுவாசநோய் பிரச்சனைக்கு ஆளாக நேரிடுகிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள அறிவுரையில், இந்த கடல் வழியாக பயணிக்கையில், அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களது உடல்களில் உராய்வு அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தால், அதனை நீர்ப்புகா பூச்சுகளை வைத்து நன்றாக அடைத்துவிடுங்கள். முடிந்தவரை இந்த தண்ணீரை அருந்துவதினை தவிர்த்து விடுங்கள் என கூறியுள்ளனர்.

Facebook Comments