மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகள் தங்களுக்கு வசதியான ஆடையை அணிவதற்கு நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர். ஆடை கட்டுப்பாடுகள் மாணவிகளுக்கு மட்டுமே விதிக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் கல்லூரி விடுதிக்குள் இரவு 9.30 மணிக்கு மேல் அனுமதிக்க முடியாது என்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Facebook Comments