பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் சூராஜ் (வயது 22) . இவர் 42 வயதான தனது மாமியார் ஆஷா தேவியை காதலித்து மணந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சூரஜ் என்பவருக்கும் லலிதாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில தினங்களுக்கு பின்பு சூராஜிற்கு உடல் நிலை சரியில்லை என்று அவரை பார்த்துக்கொள்ள லலிதாவின் அம்மா ஆஷா தேவி அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆஷாவின் கணவர் டெல்லியில் பணிபுரிவதால், சூராஜ் மற்றும் ஆஷாவிற்கு இடையே காதல் ஏற்பட்டு இருவரும் வெளியேயும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஜூன் மாதம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டதாகவும், பின்னர் தங்களின் கிராமத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

திரும்ப வந்த பிறகு, ஊர் பஞ்சாயத்து, இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிப்பதால் சேர்ந்து வாழ அனுமதி அளித்துள்ளது. தற்போது இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். இதற்கு முந்தைய திருமணத்தில் இருந்து சட்டரீதியாக விவாகரத்து வாங்கி இருவரும் பிரிந்து வந்தனரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

தனது மகளுடன் சேர்ந்து சூராஜிடன் வாழ ஆஷா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களின் இந்த செயலால் அவர்களது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர்.

Facebook Comments