ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர். இவர்கள் இருவரும் நடிகையாவதற்கு பல வாய்ப்புகள் வந்தும் இன்னும் ஏற்கவில்லை. மகள் ஜான்வி கபூர் தற்போது நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.

படிப்பு முடிந்ததும் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இதற்கிடையில் ஜான்வி, குஷி இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ஜான்வி தனது boy friend சயிக்கர் பாஹரியாவுக்கு லிப் டு லிப் முத்தம் தரும் படங்கள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் சயிக்கரும் ஜான்வியின் கன்னத்தில் முத்தம் தரும் படங்களும் உலா வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவின் பேரன்தான் சயிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments