அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சார்ள்ஸ் எச்.ரிவ்கின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைவரும் அவர், 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாட உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆசியா உடனான இணைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இவரது விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments