தேவையான பொருட்கள் 

கம்பு மாவு – ஒரு கப்
முளைவிட்ட பச்சைப்பயறு – அரை கப்
தேங்காய்த்துருவல் – அரை கப்
நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து, ஆறவிடவும். பின்னர் கம்பு மாவில் வெதுவெதுப்பான நீர் தெளித்து, கட்டி இல்லாமல் பிசிறவும். புட்டு அச்சில் கம்பு மாவு, முளைப்பயறு, தேங்காய்த்துருவல் என்றபடி அடுத்தடுத்து அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்பு – பச்சைப்பயறு புட்டு தயார்…!

– See more at: http://athavannews.com/?p=265871#sthash.dAGRKGn8.dpuf

Facebook Comments