காதல் தொடர்பொன்றினால் ஏற்பட்ட பிரச்சினை லொறியொன்றை எரிக்கும் தூரம் வரை சென்றுள்ளது.

கம்பளை கம்வதுர , மாவதுர பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கள்ளக்காதல் விவகாரமே இவ்வளவு தூரம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் உரிமையாளர், சந்தேகநபரின் மனைவியுடன் தொடர்பொன்றைப் பேணிவந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தேகநபர் இரவு நேரத்தில் லொறிக்கு தீயிட்டுள்ளார்.

லொறி எரிப்பினால் இரண்டு இலட்சம் வரை நட்டமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments